தார்சாலையாக மாற்றலாமே!

Update: 2022-09-11 16:09 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரத்தில் இருந்து கே.புதுப்பாளையம் செல்லும் சாலையில் தோளூர் அருகே சாலையை கடக்கும் வாய்க்காலில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பணி முடிந்து பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள மண்ணை சுத்தம் செய்து தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்லும்போது மணல் துகள்கள் பறப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

-நவமணி, கே.புதுப்பாளையம்

மேலும் செய்திகள்