மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கீழத்தெரு மாரியம்மன் கோயில் சாலை வளைவு மற்றும் உத்வாகநாதஸ்வாமி கோயில் அருகே உள்ள சாலை வளைவுகளில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமணஞ்சேரி