நாகை-நாகூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வேகத்தடை இருந்தும் அது சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையை சீரமைக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.