நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகத்திலிருந்து நெய் குன்னம் வரை ஆற்றங்கரை சாலை உள்ளது.இந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்