வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-12 14:40 GMT

மன்னார்குடி தேரடி அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பில்(நேதாஜி சிலை) வேகத்தடை அமைக்காததால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த பகுதியலி தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் துறை அலுவலகங்கள்,கோர்ட்டு , போலீஸ்நிலையம், காவலர் குடியிருப்பு போன்றவை உள்ளன.இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மன்னார்குடி.

மேலும் செய்திகள்