செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-12 10:41 GMT
கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் உள்ளது. இந்த சாலையின் தெற்கு பகுதியில் முட்செடிகள் உள்ளிட்டவை வளர்ந்து சிறு காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் விஷ பாம்புகள் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், அந்த பகுதியில் சிலர் குப்பைகளையும் கொட்டி தீவைப்பதால், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, முட்செடிகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்