திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பஜார் பகுதியில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி