சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-07 12:38 GMT


நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சிந்தாமணிகாடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியல் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்த விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் சிந்தாமணிகாடு  

மேலும் செய்திகள்