தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஒரு சில சாலைகளில் உள்ள வேகத்தடைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் வேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வேகத்தடைகளை புதுப்பித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.
-சரவணன், தர்மபுரி.