சென்னை கிண்டி, ரேஸ் வியூவ் காலனியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சாலையில் உள்ள நடைபாதைகள் மிகவும் சிதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அவதியடைகின்றனர். நடைபாதை சேதமடைந்து உள்ளதால், அதில் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைக்கவேண்டும்.