சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சில சமயம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் மக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.