தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தாமணி குடியிருப்பு அருகில் தமிழ் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வல்லம் சாலையில் வேகத்தடை இல்லை .இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . இதனால் தமிழ் பல்கலைக்கழகம் செல்லும் மாணவ, மாணவிகள் , மாற்றுத்திறனாளிகள் , பேராசிரியர்கள் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க வல்லம் சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனியவன், தஞ்சாவூர்