நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் ரயில்வே மேம்பாலம் முடிவில் விசாணம் பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனம் அதிகமாக செல்வதால் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், காமராஜ் நகர், நாமக்கல்.