பேவர் பிளாக் கற்கள் அமைக்க வேண்டும்

Update: 2022-09-02 16:28 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரிநகர் முனியப்பன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சாலையில் உள்ள பேவர் பிளாக் கற்களை அகற்றி பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குடிநீர் குழாய் பதித்த பின் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவில்லை. இதனால் இந்த சாலையில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராஜ், தர்மபுரி.

மேலும் செய்திகள்