சாலையில் குழி

Update: 2026-04-26 18:21 GMT

வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் ஒரு பேக்கரி எதிரே குழி காணப்படுகிறது. அதில் அடிக்கடி மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அந்த குழியில் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். அத்துடன் வாகனங்களும் சேதம் அடைகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்