திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகர் மெயின் ரோட்டில் தஞ்சை-திருச்சி சாலை இணையும் இடத்தில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதியில் தார்சாலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி குண்டும், குழியமாக காணப்படுவதினால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.