பாவூர்சத்திரம் அருகே மேலகிருஷ்ணப்பேரியில் இருந்து பெத்தநாடார்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாைல நடுவில் ஆங்காங்கே ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.