வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-04-26 18:00 GMT

போளூர்-செங்கம் சாலையில் இருந்து கடலாடி வழியாக ‌வீரளூர் செல்லும் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை இருக்கும் இடத்தில் ‌எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. வேகத்தடை மீது வர்ணம் பூசவில்லை. இரவில் இருசக்கர வாகனத்தில் வருவோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும், அல்லது எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

-முருகன், கடலாடி.

மேலும் செய்திகள்