சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2026-04-26 17:14 GMT
நெல்லை மேலப்பாளையம் பைபாஸ் ரோட்டில் இருந்து சந்தை ரவுண்டானா வரை சாலை விரிவாக்கத்துக்காக இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லி கற்களால் நிரப்பப்பட்டது. மேலப்பாளையம் குடிநீர் தொட்டி எதிரே பெட்ரோல் பங்க் அருகில் சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் வெளியேறி சாலையோரம் குளம் போன்று தேங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையோர பள்ளத்தை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்