கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை அருகே வாகன விபத்துகளை தடுக்க சற்று உயரமாக வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் அந்த வேகத்தடை மீது ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக அருகில் உள்ள வீடுகளும் குலுங்கி வருகிறது. இதனால் வீடுகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே அந்த வேகதடையை உயரத்தை குறைத்து அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.