தார் சாலை அமைப்பார்களா?

Update: 2026-04-26 18:48 GMT

குடியாத்தம் தாலுகா அக்ராவரம் ஊராட்சி சாமுண்டிபுரம் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லை. கிராமத்துக்கு தார் சாலை அமைத்துத்தர கோரி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதுள்ள சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் அரசு அல்லது குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சாலை அமைக்க வழி செய்ய வேண்டும்.

-துரை, அக்ராவரம். 

மேலும் செய்திகள்