சாலையின் நடுவே கற்கள்

Update: 2022-07-10 19:54 GMT

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதற்காக தோண்டிய பள்ளத்தில் கற்களை வைத்து மூடி இருக்கின்றனர். சாலையின் நடுவே கற்கள் இருப்பதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கல் மீது மோதி கீழே விழுந்து விடுகின்றனர். விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்