நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி தாலுகா தேவராயபுரம் ஊராட்சியில் நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் செல்லிபாளையம் சாலையில் இருந்து வரகூர் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டு்ம்.
-தினேஷ், எருமப்பட்டி, நாமக்கல்.