ஆபத்தான சாலை

Update: 2022-08-30 17:24 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குறிஞ்சிநகர் சுங்கசாவடியையொட்டி நாராயணபுரம் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குழிகள் தோண்டி வைத்துள்ளனர். இந்த குழிகளில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த குழிகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, தர்மபுரி.

மேலும் செய்திகள்