ஆமை வேகத்தில் சாலை பணி

Update: 2022-08-28 17:48 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் மலைமேல் அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு பஸ்சில் சென்று வர மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அந்த பணி வேகமாக நடைபெறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி அந்த பணியை விரைவாக முடித்து பஸ் இயக்க வேண்டும்.

-வீரவேல், மின்னம்பள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்