தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்தாலும் தற்போது முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தே.சக்கரவர்த்தி, தர்மபுரி.