சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-28 15:56 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த அத்திமுட்லுவில் இருந்து அகரம் செல்லும் சாலை சுமார் 1 கி.மீ. தூரம் சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், நடந்து செல்லும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, தர்மபுரி.

மேலும் செய்திகள்