பாலக்கோடு- தர்மபுரி சாலையில் பாலக்கோடு மெயின் பஜாரில் தார்சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-நீரஜ், பாலக்கோடு, தர்மபுரி.