மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் மெயின் ரோட்டில் தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததாலும் மற்றும் எந்த விதமான அறிவிப்பும் இல்லாததால், இதை கடக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள்,அல்லிவிளாகம்.