கூத்தாநல்லூரிலிருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சில இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இத்தகைய வளைவுகளில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள், கூத்தாநல்லூர்.