நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிலோ மீட்டரை குறிக்கும் கல் வாகனம் மோதியதில் இடிந்து சாய்ந்து கிடக்கிறது. அதை சீரமைக்காமல் அப்படியே பெயிண்டு அடித்து எழுதப்பட்டுள்ளது. அதனால் கல் சாய்ந்த நிலையில் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சீரமைப்பார்களா?
-சுப்பு, மோகனூர், நாமக்கல்.