நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மின்னக்கல் ஊராட்சி வடுகம்பாளையம் கிராமத்தில் தார்சாலை சேதமடைந்து மோசமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.மணிவாசகம், வடுகம்பாளையம், நாமக்கல்.