நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலை அருகில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த இடத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள், மிகவும் வேகமாக செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆழியூர்