நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூர் திரிகுளத்தெரு கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன.இங்கு தார்ச்சாலை வசதி கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வர சிரமமான நிலை உள்ளது.மேலும் மழை காலங்களில் மண் சாலைகளில் சேறும், சகதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலை யை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து கொடுக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்.