நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பைல்நாடு ஊராட்சிக்குட்பட்ட செங்காடு புதூர் கிராமத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல மண் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த மண் சாலையில் கற்கள் வெளியே தெரிந்தும், பள்ளம் ஏற்பட்டு காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் செங்காடு புதூர் கிராமத்தில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், செங்காடு.