தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அது முறையாக பராமரிக்கப்படாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து அம்மா பூங்காவை சீரமைத்தனர். பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பெய்த கனமழைக்கு பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஏரியூரில் உள்ள அம்மா பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், அச்சம்பட்டி.