பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த மரக்கன்றுகள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுவதினால், தற்போது காய்ந்து வருகிறது. இதனால் மரக்கன்றுகள் வைத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரக்கன்றுகளுக்கு போதிய அளவு தண்ணீர் விட்டு அதனை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.