பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் பூங்காவில் கழிவறை வசதி இல்லாததால், இங்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பூங்காவில் கழிவறை வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.