திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் பூங்கா உள்ளது. அந்த பகுதி மக்கள், மாலை நேரங்களில் அந்த பூங்காவிற்கு சென்று பொழுதுபோக்குவது வழக்கம். ஆனால் அந்த பூங்காவில் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள், நடைபாதை ஆகியவை மோசமாக உள்ளது. மேலும் பூங்காவில் உள்ள கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக்கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.