ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு டெபிள்அட்கோ காலனியில் உள்ள பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.