கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியத்தில் உள்ள அம்மா பூங்கா, 17-வது வார்டு ஜெக்கப்பன் நகரில் உள்ள சிறுவர் பூங்கா, கிருஷ்ணகிரி டான்சி தொழிற்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா, சிறுவர் பூங்கா போன்றவற்றுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இந்த பூங்காக்களை சீரமைக்க வேண்டும்.