ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. அது பாழாகி கிடக்கிறது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அத்துடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளது. சாலையை சீர் செய்ய வேண்டும். அத்துடன் சிறுவர் பூங்காவில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைத்து பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நித்தியானந்தம், காரை.