சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கிராஸ் ரோடு புதுவண்ணை பகுதியில் தந்தை பெரியார் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளதால், அது தற்போது காடு போல காட்சி அளிக்கிறது. இதனால் பூங்காவில் எலிகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், சமூக விரோதிகள் இந்த பூங்காவை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பூங்காவிற்கு பாதுகாப்பு பணியாளர் ஒருவரை நியமிப்பதோடு, பூங்காவை முறையாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.