ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் உள்ள சிமெண்டு இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. அதில் பொதுமக்கள் அமர முடியாத நிலை உள்ளது. தற்போது லேசான சிமெண்டு வேலை செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விடலாம். முழுமையாக உடைந்த பிறகு அதை முற்றிலும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-வசந்த், ஆரணி.