சென்னை தண்டையார்பேட்டை, இளையா நகர் பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தினமும் வந்துசெல்வது வழக்கம். இந்த பூங்காவில் ஆங்காங்கே சுவர்கள், நடைபாதைகள் சேதமடைந்த உள்ளது. மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைப்பார்களா என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.