திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம். இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பொருள்கள் மற்றும் பூங்காவில் பல இடங்கள் சேதமடைந்து உள்ளது. மேலும், பூங்காவில் போதுமான மின்விளக்குகள் இல்லை. இதானல் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.