திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவானது இரவு நேரத்தில் இரும்பு கேட் கொண்டு மூடப்பட்ட நிலையில், இந்த இரும்பு கேட்டின் ஒரு பகுதி உடைந்திருந்தது. இதனால் இரவு நேரங்களில் கேட்டை பூட்ட முடியாமல் உள்ளதால், இப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் உள்ளே சென்று படுத்துக்கொள்வதுடன், சட்டவிரோத செயல்களும் நடைபெறுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கேட்டை சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.