பூங்காவில் சரிந்து கிடக்கும் மரம்

Update: 2026-06-28 17:00 GMT

சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அம்மா பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை ே்நரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பூங்காவிற்குள் நின்ற பழமையான மரம் சாிந்து விழுந்தது. அதனை வெட்டி அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாய்ந்து கிடக்கும் மரம் வெட்டி அகற்றப்படுமா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்