பூங்காவை பாதுகாக்க கோரிக்கை

Update: 2026-06-07 17:30 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் உடற்பயிற்சி சாதனங்கள், இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவானது இரவு நேரத்தில் இரும்பு கேட் கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் இந்த இரும்பு கேட்டின் ஒரு பகுதி உடைந்து உள்ளதால், இரவு நேரங்களில் கேட்டை பூட்ட முடியாமல் உள்ளதால், இப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் உள்ளே சென்று படுத்துக்கொள்கின்றன. மேலும், சட்டவிரோத செயல்களும் நடைபெறுகின்றன. எனவே இந்த கேட்டை சரி செய்து பூங்காவை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்