பூங்கா நேரம் அதிகரிக்கப்படுமா?

Update: 2026-06-07 06:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் படகு குலாம் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பொழுதுபோக்குக்காக செல்வது வழக்கம். வெயில் காலம் என்பதால் மாலை நேரங்களில்தான் மக்கள் வருகின்றனர். ஆனால், இந்த பூங்காக்களில் இரவு 8 மணிக்கே மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுகிறார்கள். இதனால் பொழுதை கழிக்கவரும் குடும்பங்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்கா மூடப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்